செஞ்சி; செவலபுரை செல்லியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி அடுத்த செவலபுரை செல்லியம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்தனர். மாலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் செல்லியம்மனுக்கு 12வது மாதமாக ஊஞ்சல் உற்சவம் நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.