பழநிக்கு பாதயாத்திரை; காவடிகளுடன் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2025 11:01
வடமதுரை; பழநி முருகன் கோயிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் என இரு திருவிழாக்கள் அதிமுக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகிறது. தைப்பூசத்தில் பாதயாத்திரை பயணமும், பங்குனி உத்திரத்தில் தீர்த்த காவடிக்கும் பக்தர் முக்கியத்துவம் தருகின்றனர். இதனால் தைப்பூசத்தை முன்னிட்டு டிசம்பர் 2வது வாரத்தில் இருந்தே பக்தர்கள் குழுக்களாக பழநிக்கு பாதயாத்திரை செல்ல துவங்கிவிடுவர். தைப்பூசம் நெருங்கும் நேரத்தில் பக்தர்கள் எண்ணி்க்கை பன்மடங்காக அதிகரிக்கும். திருச்சி, தஞ்சாவூர், அரியலுார், புதுக்கோட்டை உள்ளிட்ட வட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திண்டுக்கல் திருச்சி நான்கு வழிச்சாலை வழியே அய்யலுார், வடமதுரை, எரியோடு, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் வழியே பாதயாத்திரையாக சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். நேற்று செங்குறிச்சி புதுப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் ஒரே குழுவாக வடமதுரை வழியே சென்றனர். இவர்கள் நாளை சுவாமி தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.