திருப்புத்தூரில் தைப்பூச விழா துவக்கம்; ஜன.26ல் வெள்ளி வேலுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2025 05:01
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழா துவங்கியது. ஜன.26ல் வெள்ளி வேலுக்கு அபிஷேகம் நடைபெறும்.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தைப்பூச விழா துவங்கியது. நேற்று இரவு 7:00 மணிக்கு மூலவர் சுப்பிரமணியருக்கு சிவாச்சார்யர்களால் பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி தீபாராதனை நடந்து விழா துவங்கியது. தைப்பூசம் வரை சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். நாளை மாலையிலும், ஜன. 9 மாலையிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின்னர், ஜன.19ல் சஷ்டியை முன்னிட்டு அபிஷேகம்,மறுநாள் திருவிளக்கு பூஜை நடைபெறும். ஜன.26ல் காலை 10:00 மணிக்கு சுவாமிக்கும்,வெள்ளிவேலுக்கும் அபிஷேகம் நடைபெறும். ஜன.29 ல் மாலையில் 108 சங்காபிேஷகம், பிப். 3ல் சுவாமி திருவீதி உலாவும் நடைபெறும். தொடர்ந்து பிப். 5ல் பக்தர்கள் பழநிபாதயாத்திரை துவங்குவர்.மறுநாள் மூலவருக்கு பஞ்சாமிர்த சிறப்பு அபிேஷகமும், பிப்.11ல் தைப்பூச சிறப்பு அபிஷேகமும் நடைபெறும்.