பதிவு செய்த நாள்
30
நவ
2012
11:11
துறையூர்: துறையூர், செங்குந்தர் முதலியார் தெருவில் உள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில், 35வது ஆண்டு விழாவையொட்டி, ஸ்வாமி வீதி உலா நடந்தது. துறையூர் செங்குந்தர் முதலியார் தெருவிலுள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஸ்வாமி கோவில், 35வது ஆண்டு கந்தசஷ்டி விழாவில், முதல் நாள் முகூர்த்தக்கால் நடுதல், அபிஷேகம், தீபாராதனை, இரண்டாவது நாளில் சக்தியிடம் முருகன் வேல் வாங்குவது, சூரசம்ஹார விழா நடந்தது. மூன்றாம் நாளில் திருக்கல்யாணம், அன்னதானம், ஸ்வாமி வீதி உலா, வேம்பழகு மாரியம்மன் தீபாராதனை நடந்தது. ஸ்வாமி வீதி உலாவில் சிறுவர்கள் முருகன் வேடமிட்டு வந்தனர். திரளான பக்தர்கள் கோவிலில் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.