திருப்பரங்குன்றம் கோயிலில் பிரசாதங்கள் விலை உயர்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30நவ 2012 11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், பிரசாதங்கள் விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டது. கோயில் பிரசாதங்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை கோயில் மூலம் ஏலம் விடப்படும். பிரசாதங்கள் விற்பனை உரிமம் 1.7.2010 முதல் 30.6.2011 வரை 27 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய், 1.7.2011 முதல் 30.6.2012 வரை 30 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலம் போனது. லட்டு 40 கிராம், முறுக்கு 30 கிராம், அப்பம் 30 கிராம், புளியோதரை 100 கிராம், வடை 30 கிராம், அதிரசம் 30 கிராம், சர்க்கரைப் பொங்கல் 100 கிராம் தலா 5 ரூபாய்க்கு விற்க கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. சில மாதங்களாக இவை தலா 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் எடை குறிப்பிட்ட அளவு இல்லை. இதற்கான விலைப் பட்டியலும் வைக்கப்படவில்லை. விளக்குகளும் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.