காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட சொர்க்கவாசல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2025 08:01
காஞ்சிபுரம் ; காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் அருகே 108 வேலை தேசங்களில் 44 வது திவ்ய தேசமாக விளங்கும் அருள்மிகு ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. வெள்ளி தகடுகளால் ஆன கதவில் திறக்கப்பட்டு அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் முதல் முறையாக இன்று சொர்க்கவாசல் திறப்பு ஒட்டி அஷ்டபுஜ பெருமாள் ரத்னாங்கி சேவையில் காட்சி அளித்தார். பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.