ரகோத்தமரின் 452 வது ஆராதனை விழா; மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிருந்தாவனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2025 10:01
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், மணம்பூண்டி ரகோத்தமர் சுவாமிகளின் 452 வது ஆராதனை விழாவில் மூலபிருந்தாவனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப ஆராதனை நடந்தது.
பாவபோதகர் என போற்றப்பட்ட உத்திராதி மடத்தில் பீடாதிபதி ரகோத்தம சுவாமிகளின் மூல பிருந்தாவனம் திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டியில் அமைந்துள்ளது. இவரது 452 வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 9ம் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு நிர்மால்ய பூஜை, 5:00 மணிக்கு மூல ராமருக்கு சிறப்பு பூஜைகள், 7:00 மணிக்கு மூலப் பிருந்தாவனம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை 8:30 மணிக்கு அதிர்ஷ்டத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் 10:00 மணிக்கு மூலராமர் பூஜை, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாத விநியோகிக்கபட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை உத்திராதி மடத்தின் குருஜி ஸ்ரீ சத்யார்த்தம தீர்த்த சுவாமிகளின் உத்தரவுப்படி, பிருந்தாவனத்தின் செயலாளர் ஆனந்த தீர்த்தாச்சாரிய சிம்மலகி செய்திருந்தார். இதில் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.