பதிவு செய்த நாள்
15
ஜன
2025
11:01
மேட்டுப்பாளையம்; தைப் பொங்கலை முன்னிட்டு, ஆஞ்சநேயர் காய்கறிகள் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில், தாளத்துறையில் டி.ஆர்.எஸ்., ஹைவே சிட்டியில், அபீஷ்ட வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. உத்திராயண புண்ய கால தைப் பொங்கலை, முன்னிட்டு நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சுப்ரபாதம் பாடப்பட்டது. தாஸன் ரிஷி பட்டர், ஆஞ்சநேயருக்கு புதிய வஸ்திரம் மற்றும் தங்க கவசம் அணிவித்தார். அதைத் தொடர்ந்து விசேஷ ஹோமம், திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பின் காய்கறிகளால், சுவாமிக்கு அலங்காரம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை, சிறப்பு நிவேதனம், மங்கள ஆரத்தி, சிறப்பு பூஜை நடைபெற்றது. காலை, 6:00 மணியிலிருந்து பக்தர்கள் வழிபாட்டுக்கு விடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, ஆஞ்சநேயர் சுவாமியை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.