பதிவு செய்த நாள்
15
ஜன
2025
12:01
பந்தலூர்; பகவதி கோவில் திருவிழாவில் பல்வேறு தெய்வங்களின் அருளாசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பந்தலூர் அருகே எருமாடு, குதிரம்பம் பகுதியில் பிரசித்தி பெற்ற துர்கா பகவதி ஆலய, மகர செவ்வாய் மஹோற்சவம், நேற்று காலை நடை திறப்பு, மகா கணபதி ஹோமம், நிர்மால்ய தரிசனம் அபிஷேகம்,உஷபூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து துர்க்கையம்மன் ,கரியாத்தான் மற்றும் துர்காதேவி, பகவதி வெள்ளாட்டு,குளிகன் நிகழ்ச்சி நடந்தது. இதில் அம்மன், பகவதி,கரியாத்தான் வேடமிட்ட, வெளிச்சபாடிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று சர்வ ஐஸ்வர்ய பூஜை, கலசாபிஷேகம், அன்னதானம், நடை திறப்பு,தீபாராதனை,பகவதி சேவை, குருஸி பூஜைகள் நடந்தது. இதில் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு அருளாசி வழங்கியது பக்தர்களை கவர்ந்தது சிறப்பு பூஜைகளை ஜெயராம்பட் தலைமையிலான குழுவினர் செய்தனர். ஏற்பாடுகளை ஸ்ரீனிவாஸ், விஜயா, சங்கீதா மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.