கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் பொங்கல் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2025 12:01
விழுப்புரம்; கோலியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் தை திருநாள் சிறப்பு வழிபாடு நடந்தது. கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ நிலாதேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் தை மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 8:00 மணிக்கு தொடங்கி மூலவர் பெருமாளுக்கும், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. மூலவர் வரதராஜ பெருமாள் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தாயார் உடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. பிறகு, உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, அர்த்தமண்டபத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.