பழநி; தமிழக அரசு அறிவித்த அறுபடை வீடு ஆன்மீகப் பயணம் பழநியில் நிறைவடைந்தது. பழநி கோயிலில் இருந்து நேற்று தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் அறுபடைவீடு ஆன்மீக சுற்றுப்பயணம் நிறைவடைந்தது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை மண்டல பக்தர்கள் 240 பேர் அனுமதிக்கப்பட்டனர். ஜன.20ல் திருசெந்தூரில் அறுபடை வீடு ஆன்மீக சுற்று பயணம் துவங்கியது. திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோயில், ஸ்ரீரங்கம், சுவாமி மலை,திருத்தணி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் நேற்று முன்தினம் பக்தர்கள் பழநி வருகை தந்து இரவு தங்கினர். நேற்று காலை பழநி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அதன் பின் அவர்களுக்கான பஸ்களில் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.