பதிவு செய்த நாள்
25
ஜன
2025
10:01
செஞ்சி; பவதாரணி நகர் காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோவில் ஐந்து நிலை ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ந செஞ்சி சிறுகடம்பூர் அன்னை பவதாரணி நகர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜகோபுரம் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அதை முன்னிட்டு.23ஆம் தேதி காலை 8 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானி சங்கல்பம், மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி ஆகியான நடந்தது. மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பனம்/ ரக்ஷா பந்தனம், கலச ஸ்தாபிதமும், 6 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், 8.30 மணிக்கு பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து புறப்படும் 9.45 மணிக்கு 5 நிலை ராஜகோபர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் அன்னை பவதாரணி, மஸ்தான் எம்.எல்.ஏ., தொழில் அதிபர் கோபிநாத் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.