பதிவு செய்த நாள்
25
ஜன
2025
03:01
வடமதுரை; தினமலர் செய்தி எதிரொலியாக வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் அன்னதானக் கூடத்திற்கு புதிய கட்டட பணி துவங்கியது.
இக்கோயிலில் 2011 முதல் தினமும் 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதற்காக ஓட்டு கூரையிலான பழமையான அறை பயன்பாட்டில் உள்ளது. இது பழுதாகி பாதுகாப்பற்றதாக இருப்பது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ரூ.72 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட நேற்று பூமி பூஜையுடன் பணி துவங்கியது. வேடசந்துார் எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் சபிதா, ஆய்வாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் கனகலட்சுமி முன்னிலை வகித்தனர். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், நகர செயலாளர் கணேசன், பொருளாளர் முரளிராஜன், ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, அவைத்தலைவர் முனியப்பன் பங்கேற்றனர்.