பதிவு செய்த நாள்
30
ஜன
2025
12:01
கலசப்பாக்கம்; கலசப்பாக்கம் அருகே, 4,560 அடி உயர பர்வதமலையில் நவீன இடி தாங்கி அமைப்பது குறித்து ஆய்வு நடந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், தென்கயிலாயம் என போற்றப்படும் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில், நந்தி வடிவமான, 4,560 அடி உயர பர்வதமலை மீது, 1,000 ஆண்டு பழமையான பிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ தினங்களில் மட்டும் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவர். இந்நிலையில் தற்போது தினமும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. கோவிலில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன்பு இடி தாக்கியதில் கோவில் சிற்பங்கள் சேதமடைந்ததால், 4 இடிதாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதல் பாதுகாப்பு கருதி, 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன இடி தாங்கி பொருத்த, ஹிந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்து, அதற்கான ஆய்வு நேற்று நடத்தப்பட்டது.