Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி நோக்கி பக்தர்கள் ... மகா வாராஹி கோவிலில் ராஜஷியாமளா நவராத்திரி உற்ஸவம் துவக்கம் மகா வாராஹி கோவிலில் ராஜஷியாமளா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 33 ஆண்டுக்கு பின் பிப்., 3ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 33 ஆண்டுக்கு பின் பிப்., 3ல் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

30 ஜன
2025
04:01

ஆனைமலை; ஆனைமலையில், 33 ஆண்டுகளுக்கு பின், தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் வரும், 3ம் தேதி கும்பாபிஷேக நடக்கிறது.


ஆனைமலையில், ஹிந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட தர்மராஜா, திரவுபதி அம்மன் கோவில் உள்ளது.  இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, 33 ஆண்டுகள் ஆகியது; கோவில் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக்குழுவினர் முடிவு செய்து, கடந்த, 2020ம் ஆண்டு விமான பாலாயம் செய்யப்பட்டது. அதன்பின், தொல்லியல் துறை, ஹிந்துசமய அறநிலையத்துறை மாநில குழுவிடம் முறையான அனுமதி பெறப்பட்டது. 


கடந்த, 2022ம் ஆண்டு மற்ற சன்னதிகளுக்கு பாலாலயம் நடத்தப்பட்டு  புதுப்பிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  தற்போது, கோவில் விமானம், சன்னதிகள், சுவாமி சிலைகள் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்., 3ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர், திருப்பணிக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். கும்பாபிஷேக விழா வரும் பிப்., 1ம் தேதி மதியம், 2:00 மணிக்கு முளைப்பாளிகை, தீர்த்த குடம், சீர்தட்டு வாத்தியத்துடன் அழைத்து வரப்படுகிறது. மாலையில், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டதிக்பாலகர் பூஜை, முதற்கால யாக பூஜை, வேதபாராயணம், 108 மூலிகை திரவிய ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. வரும், 2ம் தேதி காலை, இரண்டாம் கால யாக பூஜை, கலச பூஜை, கணபதி ஹோமம் சுதர்சன ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நரசிம்ம ஹோமம் , நட்சத்திர ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள், நடக்கிறது. மதியம், விமான கலசம் யந்திர பிரதிஷ்டை, மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, நடக்கிறது.  இரவு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. வரும், 3ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, காலை, 9:15 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, மகாகணபதி, தர்மராஜா, திரவுபதி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம், மூல மூர்த்திகளுக்கு திருக்கல்யாண வைபவமும், மாலையில் சுவாமிகள் திருவீதி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டினை, கோவில் அறங்காவலர் செந்தில்வேல், ஆய்வாளர் சித்ரா மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் பூஜ்யஸ்ரீ சங்கராச்சாரியார் சுவாமிஜிகள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar