பதிவு செய்த நாள்
30
ஜன
2025
04:01
உத்திரமேரூர்; விழுப்புரம் மாவட்டம், ஏழுசெம்பொன் கிராமத்தில் உள்ள தென் திருவேங்கட வரதராஜ பெருமாள் கோவில் பக்தசபை சார்பில், 15-ம் ஆண்டு திருப்பதி பாதயாத்திரை, கடந்த 27-ம் தேதி துவங்கியது. இதை தொடர்ந்து, இன்று காலை 11:00 மணியளவில், உத்திரமேரூர் வழியே கடந்து சென்றனர். அப்போது, பக்தர்கள் விரதமிருந்து துளசி மாலை அணிந்தவாறு, மஞ்சள் ஆடைகள் அணிந்து, பஜனை பாடிய படி, ‘கோவிந்தா... கோவிந்தா’ என உச்சரித்தவாறு பாதயாத்திரை மேற்கொண்டனர். அப்போது, பக்தர்கள் நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் வேடமிட்டு, மக்களுக்கு ஆசி வழங்கினர். இதை தொடர்ந்து, காஞ்சிபுரம், அரக்கோணம், திருத்தணி வழியாக சென்று, பிப்., 3ம் தேதி திருமலையில் வெங்கடேச பெருமாளை தரிசிக்க உள்ளதாக தெரிவித்தனர்.