திருநாவாய நவமுகுந்தர் கோவிலை சுத்தம் செய்த தமிழக புனித யாத்ரீகர் குழு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2025 03:02
பாலக்காடு; திருநாவாய நாவாமுகுந்தர் கோவிலை சுத்தம் செய்து முன்மாதிரியான செயலை செய்துள்ளன தமிழகத்தைச் சேர்ந்த புனித யாத்ரீகர் குழு.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் அருகே பாரதப்புழை ஆற்றின் கரையோரம் பிரசித்தி பெற்ற திருநாவாய நாவாமுகந்தர் கோவில் உள்ளது. இக்கோவில் மூலவர் தரிசிக்க சென்னையிலிருந்து இரண்டு புனித யாத்திரிகர் குழுக்கள் வந்தனர். மூலவரை தரிசித்து வழிபட்ட குழுக்கள் கோவிலை சுத்தம் செய்ய விருப்பம் தெரிவித்து கோவில் நிர்வாகத்திடம் அணுகினர். நிர்வாகத்தின் ஒப்புதலோடு கோவில் சுற்றுச்சுவர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பகுதி, புல் வெட்டுதல், தூசு தட்டுதல், சுற்று விளக்கு மற்றும் விளக்குகள் கழுவுதல் என அனைத்தும் சுத்தம் செய்து முன்மாதிரியான செயலை செய்துள்ளனர். சந்திரசேகரன், தனலட்சுமி தலைமையிலான 50 பேர் கொண்ட குழுவும் வரதராஜன் தலைமையிலான 30 பேர் குழுவும் இரண்டு நாட்கள் தங்கி இப்பணிகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கோவில் நிர்வாக அதிகாரி பரமேஸ்வரன் இவர்களுக்கு வேண்டிய உணவும் தங்குவதற்கான இடம் என தேவையான உதவிகளை செய்தளித்தனர்.