கூடலூர்; கூடலூர், இரும்புபாலம் ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கூடலூர், கோழிக்கோடு சாலை, இரும்புபாலம் ஸ்ரீசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா நேற்று துவங்கியது. காலை 10:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, தொடர்ந்து புண்யாவாசனம், வாஸ்துசாந்தி, மிருத்சுங்கிரணம், அங்குராற்பணம், கமலஹர்சணம், கலசஸ்தாபணம், முதற்கால யாகபூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம் மருந்து சாற்றுதல் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு வேதிகார் சசனை, இரண்டாம் கால யாக பூஜை, திரவிய ஓமம், நாடிசந்தானம், ஸ்பர்சாகுது, பூரணகுதி, யாத்ரதானம், கலச புறப்பாடுகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம், தீபாதாரணை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.