மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த குழிப்பாந்தண்டலம் பகுதியில், பழமையான பாலாத்தம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியினர், அம்மனை கிராம தேவதையாக வணங்குகின்றனர். அதே கோவிலில் மாரியம்மன், கெங்கையம்மன் ஆகியோர் சிறிய சன்னிதிகளில் வீற்றிருந்தனர். தற்போது பாலாத்தம்மன் கோவிலை புனரமைத்து, மற்ற அம்மன்களுக்கு கோவில்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து இன்று மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் கோ பூஜை, தீர்த்த சங்கல்பம், கணபதி பூஜை, முதல் கால பூஜை உள்ளிட்ட வழிபாடுகள் துவக்கப்பட்டன. இன்று காலை, மூன்றாம் கால பூஜை நிறைவடைந்து, சன்னிதிகளில் புனித நீரூற்றி, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.