பதிவு செய்த நாள்
04
டிச
2012
10:12
கோத்தகிரி:கோத்தகிரி சக்கத்தா வல்விலி ராமர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு, 2ம் தேதி காலை 9.00 மணிக்கு, கருடாழ்வார் பட்டிணப் பிரவேசமும், மாலை 3.00 மணிக்கு கலச புனித நீர் எடுத்துவருதல் நிகழ்ச்சியும், தீர்த்த பிரசாதம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 11.00 மணிவரை கருடாழ்வார் பிரதிஷ்டை, விமான கலச ஸ்தாபனம் நடந்தது. முக்கியத் திருவிழா நாளான நேற்று காலை 6.00 மணிமுதல் 9.30 மணிவரை ஹோமம் - வேதாபாராயணம், திவ்ய பிரபந்த பூர்ணாஹூதி நடந்தது. காலை 9.30 மணிமுதல் 10. 30 மணிவரை காரமடை மோகன கிருஷ்ணன் பட்டாச்சாரியார் தலைமையில், கோவில் பூசாரி மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பகல் 12.00 மணிமுதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட செயலர் அர்ஜூணன் உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுகணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர்.