கோவை கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 11:02
கோவை; ராம் நகர் திருப்பாவை திருவெம்பாவை கமிட்டி சார்பில் ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் மகா ருத்ர யக்ஞம் நிகழ்வு நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக காலை 6 மணி அளவில் விக்னேஷ்வர பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாச ஜெபம், ருத்ரா ஆவாகனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இருக்கிற ஸ்ரீருத்ரஜெபம், ஏகாதச திரவிய ருத்ர அபிஷேகம், கோ பூஜை, ஸ்ரீ ருத்ர ஹோமம், தம்பதி பூஜை ஆகியன நடைபெற்றது. நிறைவாக கலசாபிஷேகம், மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் வேத பண்டிதர்கள் ருத்ர நாமத்தை ஜெபித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.