பெரியகுளம்; பெரியகுளம் பாம்பாற்று ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம் யாகபூஜையுடன் கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மூலவர் தங்க கவசம் அலங்காரத்திலும், உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர் லட்சுமணன் தலைமையில் பக்தர்கள் செய்திருந்தனர்.