Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் ... விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச தேரோட்டம் விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 ஆண்டு பழமையான கோவிலில் புதையல்!; சுவரை இடித்த கும்பல் தப்பியோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
1000 ஆண்டு பழமையான கோவிலில் புதையல்!; சுவரை இடித்த கும்பல் தப்பியோட்டம்

பதிவு செய்த நாள்

13 பிப்
2025
10:02

வேலுார்; வேலுார் அருகே 1,000 ஆண்டு பழமையான கோவில் சுவரை இடித்து, புதையல் தேடிய கும்பல் பற்றி புகார் அளிக்கப்பட்டு உள்ளது.


வேலுார் மாவட்டம், ஊசூர் அடுத்த சிவநாதபுரத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில் கைலாசகிரி மலை உள்ளது. இதன் மீது, 1,000 ஆண்டு பழமையான கைலாசநாதர் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பராமரிப்பின்றி உள்ளது. இங்கு புதையல் உள்ளதாக நீண்ட நாட்களாக வதந்தி பரவியது. இதையறிந்த, 10 பேர் கும்பல், மூன்று நாட்களாக அங்கு, ‘டென்ட்’ அமைத்து, சமைத்து சாப்பிட்டு, கோவிலில் உள்ள கருங்கல்லால் ஆன சுவரை ஆங்காங்கே உடைத்தும், கோவிலை சுற்றி பள்ளம் தோண்டியும் புதையலை தேடி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆடு, மாடு மேய்க்க மலை மீது சென்றபோது, அவர்களை கண்டு அதிர்ச்சியடைந்து, கேள்வி எழுப்பியபோது, அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஆடு, மாடு மேய்ப்பவர்களையே கண்டிக்கும் வனத்துறையினர், மர்ம கும்பல் மூன்று நாட்களாக தங்க எவ்வாறு அனுமதித்தனர் என, சர்ச்சை எழுந்தது. அந்த கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க, வனத்துறையினரிடம், வேலுார் மாவட்ட ஹிந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் நேற்று மனு அளித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar