பதிவு செய்த நாள்
21
பிப்
2025
05:02
வால்பாறை; வால்பாறையில், மகாவீர முனீஸ்வரன் கோவில் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
வால்பாறை நகர், கக்கன் காலனி கண்திறந்து பார்த்த மகாவீர முனீஸ்வரன் கோவிலின், 25ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு திருக்கொடியேற்றப்பட்டது. விழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து புனித தீர்தத்தை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்று, சுவாமிக்கு தீர்த்த அபிேஷகம் செய்தனர். 27ம் தேதி காலை கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 28ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட் தேரில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.