Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்திக்கு ஞானரத யாத்திரை ... மகா பெரியவா அனுஷ பூஜை பக்தர்கள் கூட்டுப்பிரார்த்தனை மகா பெரியவா அனுஷ பூஜை பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

22 பிப்
2025
07:02

விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதன்படி, நடப்பாண்டு மாசிமக திருவிழா கடந்த 11ம் தேதி செல்லியம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று (21ம் தேதி) ஆழத்து விநாயகர் கோவிலில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் ஆழத்து விநாயகர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11.50 மணிக்கு ஆழத்து விநாகயர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் முன் எழுந்தருளினார். அதன்பின், சிவாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து, கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு சவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. வரும் 3ம் தேதி விருத்தாம்பிகை பாலம்பிகை சமேத விருத்தகிரீஸ்ரவர் சுவாமிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து, வரும் மார்ச் 8ம் தேதி 6ம் நாள் உற்சவமாக விருத்தகிரீஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் விபசித்து முனிவருக்கு காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது. வரும் மார்ச் 11ம் தேதி தேர்த்திருவிழா, 12ம் தேதி மாசிமகம், 13ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது. வரும் 14ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவம், வரும் 15ம் தேதி விடையாற்றி உற்சவம் ஆரம்பரம், வரும் 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நிறைவுடன் மாசிமக பெருவிழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar