பிரான்மலையில் மகா சிவராத்திரியையொட்டி பால்குட விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26பிப் 2025 04:02
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் மகா சிவராத்திரியையொட்டி பால்குட விழா நடந்தது. இதஒயொட்டி பாலமுருகன் தெய்வீகப் பேரவை சார்பில் திருக்கொடுங்குன்ற நாதர் கோயிலில் இருந்து 2000 அடி உயர மலை உச்சியில் உள்ள பாலமுருகன் கோயிலுக்கு பால்குடம் எடுத்துச் செல்லப்பட்டது. விழாவிற்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமை ஏற்று பால்குட ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி முன்னிலை வகித்தார். உமாபதி சிவாச்சாரியார் முருகனுக்கு யாகம், சிறப்பு பூஜைகளை செய்து வைத்தார். அரோகரா கோஷம் வழங்க பக்தர்கள் பால்குடங்களை தலையில் சுமந்து நான்கு ரத வீதிகள் வழியாக மலை உச்சிக்குச் சென்றனர். அங்கு பாலமுருகன் சன்னதியில் வேலுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.