திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2025 01:02
சென்னை; பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான கோச் செங்கட் சோழ நாயனார் சுவாமிக்கு குருபூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
சென்னை, திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் மாசி சதய நட்சத்திரத்தில் சுவாமிகளின் குருபூஜை ஆதிபுரீஸ்வரர் சன்னதி அருகில் அமைந்துள்ள சுவாமிக்கு முதலில் எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. அதை தொடர்ந்து பஞ்சாமிர்தம் தேன் பால் வாசனை திரவியங்கள் மற்றும் இளநீர் திருநீர் ஆகியவரால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் சுவாமியை அலங்காரம் செய்யப்பட்டதை தொடர்ந்து தூப தீப ஆராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர். கோச்செங்கோட் சோழர், சிவபெருமானது திருவருளினாலே முன்னைப்பிறப்பின் உணர்வோடு பிறந்து சைவத்திருநெறி தழைக்கத் தம் நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுந் திருப்பணியினை மேற்கொண்டார்; திருவானைக்காவில் தாம் முன்னைப் பிறப்பில் சிலந்தியாக இருந்து இறைவர் திருவடிமேல் நூலாற் பந்தரிழைத்து அருள் பெற்ற வரலாற்றினை அறிந்தவராதலால் அங்கு இறைவன் வீற்றிருக்கும் ஞானச் சார்புடைய வெண்ணாவல் மரத்தினுடனே கூத்தம்பெருமான் வீற்றிருந்தருளும் அதனைப் பெருந்திருக்கோயிலாக அமைத்தார். அமைச்சர்கள் ஏவிச் சோழ நாட்டின் உள்நாடுகள் தோறும் சிவபெருமான் அமர்ந்தருளும் அழகிய திருக்கோயில்கள் பலவற்றை அமைத்து அக்கோயில்களில் நிகழும் பூசனைக்கு வேண்டிய அமுதுபடி முதலான படித்தரங்களுக்குப் பெரும்பொருள் வகுத்துச் செங்கோல் முறையே நாட்டினை ஆட்சிபுரிந்தார். பின்னர் இறைவன் திருநடம் இயற்றும் தில்லைப்பதியை அடைந்து பொன்னம்பலத்தே ஆடல்புரியும் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றி அங்குத் தில்லைவாழந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்துப் பின்னும் பல திருப்பணிகள் செய்துகொண்டிருந்து தில்லையம்பலவாணர் திருவடிநீழலை அடைந்தார்.