பதிவு செய்த நாள்
28
பிப்
2025
04:02
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 5ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நடைபெறும் மார்ச் 20வரை காலையில் தங்க பல்லக்கு, இரவில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி யானை, வெள்ளி பூதம், அன்னம், சேஷம் ,வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்க குதிரை, பச்சை குதிரை ஆகிய வாகனங்களில் தினம் ஒன்றில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச் 11ல் கைபார நிகழ்ச்சியும், நக்கீரர் லீலை விழாவும், மார்ச் 12ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், மார்ச் 16ல் சூரசம்ஹார லீலையும், மார்ச் 17ல் பச்சை குதிரை ஓட்டம், பட்டாபிஷேகம், மார்ச் 18ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம், மார்ச் 19ல் தேரோட்டம், மார்ச் 20ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.