வல்லடிகாரர் கோயில் திருவிழா துவக்கம்; பாரிவேட்டைக்கு சென்ற மக்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2025 03:02
மேலூர்; அம்பலகாரன்பட்டியில் வல்லடிகாரர் கோயில் திருவிழா கொண்டாடுவதற்கான நாள் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து இன்று (பிப்.28 ) வெள்ளலூர் நாட்டிலிருந்து பாரிவேட்டைக்கு அம்பலகாரர்கள் தலைமையில் கிராம மக்கள் அரண்மனை சிறுவயலுக்கு சென்றனர். பிறகு மார்ச் 7 கொடியேற்றமும், மார்ச் 13 காலையில் மஞ்சுவிரட்டும், மாலையில் பூரணி மற்றும் பொற்கலை அம்பாளுடன் வல்லடிகாரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மார்ச் 14 கிடா வெட்டி உச்சி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் அன்று இரவு வெள்ளி ரதத்தில் சுவாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மார்ச் 15 தேரோட்டமும், மார்ச் 16 மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.