சேலம்: சேலம் சுவகனேஸ்வரர் கோவிலில், கால பைரவர் வழிபாட்டு குழு சார்பில், உலக நன்மைக்காக, கால பைரவாஷ்டமி மகா யாகம் நடத்தப்பட்டது. நேற்று காலை, 7 மணி முதல் பகல், 12 மணி வரை யாகம் நடந்தது. திரளான பக்தர்கள் யாக பூஜையில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 2 மணி முதல், கலசாபிஷேகம், மகா தீபாராதனை, விசேஷ அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.