சிவலிங்கேஸ்வர ஸ்வாமி கோயில் தேரோட்டம்; வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2025 09:03
கிருஷ்ணகிரி; அஞ்செட்டி அடுத்துள்ள தேவே கவுண்டன் தொட்டி மலை கிராமத்தில் 86 ஆவது ஆண்டாக ஸ்ரீ சிவலிங்கேஸ்வரர் சுவாமி திருக்கோயில் திருதேரோட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தேவேகவுண்டன் தொட்டி மலை கிராமத்தில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நகரூர் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் உள்ளது. ஸ்ரீ வீரபத்திரர் மற்றும் சனீஸ்வர பகவான் தனி சந்நிதி கொண்டு அருள் பாலிக்கும் இந்த திருக்கோவிலில் மாசி மாத தேரோட்டம் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 86 ஆவது ஆண்டு திருத்தேரோட்ட உற்சவம் நேற்று காலை கணபதி பூஜை மற்றும் ருத்ராபிஷேகத்துடன் துவங்கி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருதேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதை அடுத்து உற்சவம் மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எடுத்துவரப்பட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் காட்சி தந்து அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து வந்திருந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர். இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.