நாமக்கல் ; ராசிபுரம் அருகே உரம்பு வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தும்,விவசாயம் செழிக்க வேண்டும் என விவசாயிகள் டிராக்டர் கொண்டு தேரை இழுத்துச் சென்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மெட்டாலா அருகே உள்ள உரம்பு பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. கோவிலில் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தை ஓட்டி தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம் இந்த வருடம் தேர் திருவிழாவானது கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று மதியம் தீமிதி திருவிழாவானது நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வானது நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றும். மேலும் பல்வேறு பகுதியை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செழிக்க வேண்டும் எனவும், வாகனங்கள் விபத்து ஏற்படாமல் இருக்க டிராக்டரின் பின்புறத்தில் தேரை கட்டி இழுத்தனர். அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது..