பதிவு செய்த நாள்
14
மார்
2025
10:03
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமியன்று, பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அதன்படி நேற்று பவுர்ணமியை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாரதனைகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். மாசி மாத பவுர்ணமி திதி, நேற்று காலை, 11:40 மணி முதல், இன்று 14ம் தேதி மதியம், 12:57 மணி வரை உள்ளது. இதையடுத்து, கோவில் ராகோபுரம் தரிசனம் செய்து விட்டு பக்தர்கள் கிரிவலம் சென்றனர். வழியேங்கும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுதியது. கிரிவலம் முடித்துக் கொண்டு ஊர் திரும்ப திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அமைமோதுகிறது.