Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விளாச்சேரி வெங்கடேசப் பெருமாள் ... அயோத்தி ராம ஜென்மபூமி முழு கட்டமைப்பும் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும்; அறக்கட்டளை அயோத்தி ராம ஜென்மபூமி முழு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தகிரி பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
கோத்தகிரி பிஷல மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

17 மார்
2025
11:03

கோத்தகிரி; கோத்தகிரி பில்லிக்கம்பை அருள்மிகு ஸ்ரீ பிஷல மாரியம்மன் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவில், சனிக்கிழமை (15ம் தேதி) பகல். 12:00 மணிக்கு, கட்டை குள்ளு பகுதியில் இருந்து, அம்மனை அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 3:00 மணிக்கு, பில்லிக் கம்பை ஊரில இருந்து, அம்மன் வனக்கோயில் புறப்பாடு நடந்தது.


முக்கிய திருவிழா நாளான நேற்று, காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, அரக்கோல் இசை முழங்க, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல், 12:00 மணி முதல், 1:00 மணி வரை, கங்கை பூஜையுடன், முடிகாணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மாலை, 3:00 மணி வரை, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கிடா வெட்டி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. இரவு, 8:30 மணிக்கு, ஸ்ரீ பாரதமாதா பஜனை சபா குழுவினரின், கார சென்னே என்னும் படுகு சமுதாய நாடகம் நடைபெற்றது. விழாவில், பில்லிக்கம்பை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை ஒட்டி, இன்று காலை 8:30 மணி முதல், 11:30 மணி வரை, கக்கே ரய்யா கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. பகல், 12:00 மணிக்கு, அரக்கோல் ஆட்டம் ஆட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புனித நீராடி வழிபட அறியாமல் செய்த பாவங்களுக்கு விமோசனம்  கிடைக்கும்.மாசி மாதம் முழுவதுமே ... மேலும்
 
temple news
சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, பூமியின் நிழல் சந்திரன் மீது ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மாசி மகம் பௌர்ணமி திதியும் மகம் நட்சத்திரமும் இணையும் ஒரு புண்ணிய நாளாகும். மாசி ... மேலும்
 
temple news
ஈரான் இஸ்ரேல் போரில் பொது மக்கள் பாதிக்காமல் இருக்க கோளறு பதிகம் மற்றும் நெடுங்காலம் பதிகம் ஆகிவற்றை ... மேலும்
 
temple news
சேத்தியாத்தோப்பு: திருக்கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவிலில் மாசிமக தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar