பதிவு செய்த நாள்
28
மார்
2025
12:03
புதுச்சேரி; சட்டசபை கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்; ராமலிங்கம் (பா.ஜ): திருக்காஞ்சி கங்கை நதீஸ்வரர் கோவில் ஆற்று பகுதியில் மிக உயர சிவன் சிலை நிறுவப்படும் என்ற அறிவிப்பு எந்த நிலையில் உள்ளது. இந்த புனித தலத்தில் சுவாமி சிலையை நிறுவி, திறக்க பிரதமரை அழைக்கலாம். முதல்வர் ரங்கசாமி: நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் சிலை போன்றவற்றை நிறுவதற்கு, மத்திய மாநில அரசுகளின் அனுமதி தேவை என்பதால் இது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்கப்படும். அமைச்சர் தேனீஜெயக்குமார்: நீங்கள் எதிர்பார்க்கின்ற மாதிரி 108 அடி உயரத்தில் சுவாமி சிலை அமைக்கப்பட உள்ளது. அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. முதல் தளம் வரை பணி முடிந்துள்ளது.
ராமலிங்கம்: புதுச்சேரியில் எந்தந்த கோவில்களில் அன்னதானம் திட்டம் நடைமுறையில் உள்ளது.
முதல்வர் ரங்கசாமி: தற்போது கோவில் நிதி, தனிநபர்கள், நிறுவனங்கள் பங்களிப்போடு 10 கோவில்களில் நடைமுறையில் உள்ளது. வில்லியனுார் கோகிலாம்பிகை திருக்காமீஸ்வரர் கோவிலில் மட்டும் தனியார் நிறுவனத்தால் அன்னதானம் தினசரி வழங்கப்படுகிறது. மற்ற கோவில்களில் வாரத்தில் ஓரிரு நாட்கள் மட்டும் வழங்கப்படுகிறது.
கல்யாணசுந்தரம் (பா.ஜ): டிபாசிட் தொகை திட்டத்தை செயல்படுத்தினால் பலரும் நிதியுதவி தருவர். அதை கொண்டு பல கோவில்களில் தினசரி கூட அன்னதானம் கொடுக்கலாம்.