பதிவு செய்த நாள்
31
மார்
2025
12:03
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, ஈத்கா மைதானத்தில் இன்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முகமது ஜாபர் மௌலானா தலைமையில், இமாம் ஆஷிப் உள்ளிட்டவர்கள் சிறப்பு பிரசங்கம் செய்தனர். இமாம் ராஷித் தொழுகையை முன்நின்று நடத்தினார். இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுடனர். நிறைவாக ஒருவரை ஒருவர் ஆரக்கட்டித் தழுவி சகோதரத்துவத்தை பரிமாறிக் கொண்டனர்.
பந்தலூர்; பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில், அதிக அளவில் இஸ்லாம் சமுதாயம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் கடந்த 30 நாளாக நோன்பு இருந்த நிலையில், இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டுசிறப்பு தொழுகை நடந்தது. அதில் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் மக்கள் வாழவும், மழை பெய்து, விவசாயம் செழித்து மக்களின் வாழ்க்கை செழிப்படையவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து கல்லறைகளுக்கு சென்று உயிர் நீத்த முன்னோர்களுக்கு, சிறப்பு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஆரத் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.