காரைக்கால்; காரைக்கால் அருகே, திருத்தளிச்சேரியில், சிவலோகநாத சாமி கோயில் உள்ளது. அங்கு, ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில், ஒரு வாரம், சூரிய ஒளி, இறைவன் மீது, நேரடியாக விழும். இரண்டாவது நாளான, இன்று, காலை மூலவருக்கு, வெள்ளியங்கி அணிவித்து, சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.