காவேரியை கடந்து உறையூர் சென்ற ஸ்ரீரங்கம் நம்பெருமாள்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2025 12:04
ஸ்ரீரங்கம் ; வைணவ திவ்யதேசங்கள் 108ல் முதன்மையானதும், ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும், பூலோக வைகுண்டமுமான திருவரங்கம் திருக்கோயில் ஆதிபிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆதி பிரம்மோத்ஸவம் ஆறாம் திருநாளில் அதிகாலை, கமலவல்லி நாச்சியார் பங்குனி ஆயில்யம் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு உறையூர் புறப்பாடு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் காவேரியை கடந்து காலை உறையூர் செல்லும் வைபவம் நடைபெற்றது. உறையூர் சீருடன் மாப்பிள்ளையாக சென்ற நம்பெருமாளை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். பதினொன்று நாட்கள் இந்த உத்ஸவம் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. பங்குனி தேர் (கோரதம்) 12ம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நாளை முதல் 12ம் தேதி வரை விஸ்வரூப சேவை கிடையாது.