பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2025 12:04
விருதுநகர்; விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை யொட்டி நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் பொங்கல் விழா மார்ச் 30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப். 6ல் பொங்கல், 7ல் அக்னி சட்டி, கயிறு குத்து நடந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை 4:30 மணிக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடக்க மாலை 5:30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. முக்கிய ரதவீதி, தெப்பம் வழியாக தெற்கு ரதவீதி சங்கிலி கருப்பசாமி கோயில் முன் வந்து நின்றது. திரளான பக்தர்கள் ஆஹோ அய்யாஹோ என கோஷத்துடன் தேரை இழுத்தனர். இன்று காலை 7:00 மணிக்கு தேர் நிலையை வந்தடைகிறது. நாளை (ஏப். 10) மஞ்சள் நீராட்டுடன், அம்மன் நகர் வலம் வருதலும், அதன் பின் கொடியிறக்கம் நடக்கிறது.