Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஸ்ரீவாரி ...  பராசக்தி மாரியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் தேரோட்டம் பராசக்தி மாரியம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

பதிவு செய்த நாள்

09 ஏப்
2025
12:04

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் பங்குனி பிரம்மோற்சவ விழாவின் 5ம் நாளான நேற்று இரவு பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கடந்த 4ம் தேதி பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று கருட சேவை வைபவம் நடந்தது. காலை 7:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் தங்க பல்லக்கில் வீதி உலா நடந்தது. 11:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.  இரவு 9:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிந்தா கோஷம் முழங்க வாணவேடிக்கையுடன் நடந்த வீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 12ம் தேதி காலை தேரோட்டம் நடக்கிறது. ஜீயர் ஸ்ரீ தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில், கோவில் ஏஜென்ட் கிருஷ்ணன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar