பிரதோஷம்; சிவ வழிபாடு செய்ய சிறப்பான வாழ்வு அமையும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2025 10:04
சிவனை வழிபட மிக சிறந்த நாளில் ஒன்று பிரதோஷ தினம். இன்று நந்தியின் கொம்புகளுக்கு இடையில் சிவன் திருநடனம் புரிவதாக ஐதீகம்.
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. இன்று ஈசனை வழிபட துன்பம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும்.