வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா; விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 04:04
தேனி;வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டி பக்தர்கள் விரதம் துவங்கினர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயில் சித்திரை விழாவிற்கு தென் மாவட்ட அளவிலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் கவுமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்திரை திருவிழா மே 6 முதல் மே 13 வரை நடக்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் காலையில் கம்பத்திற்கு நீர் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். திருவிழா நாட்களில் அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்து அருள் பாலிப்பார். முக்கிய நிகழ்வான தேர்திருவிழா மே 9ல் நடக்கிறது. அம்மன் 22 நாட்கள் விரதம் இருப்பதால் நைவேத்தியமாக தெள்ளு மாறு மட்டும் படைக்கப்படும். விழா ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.