நித்தியானந்தகிரி சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 05:04
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் ஸ்ரீ ஞானானந்தா நிகேதனின் ஸ்தாபகர் நித்தியானந்தகிரி சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த தபோவனம் ஸ்ரீ ஞானானந்தா நிகேதன் ஸ்தாபகரான, சுவாமி நித்தியானந்தகிரி சுவாமிகளின் மூன்றாம் ஆண்டு ஆராதனை விழா நிகேதன் வளாகத்தில் நடந்தது. காலையில் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நிகேதன் சச்சங்க மண்டபத்தில் வேதவிற்பனர்கள் பலரும் கலந்து கொண்டு, வேத மந்திரங்கள் முழங்க, தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இதில் ஞானானந்தா நிகேதன் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.