கோவை சத்ய சாய் மந்தீரில் ஆராதனை மகோற்சவம்; பக்தர்களின் பஜன் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2025 02:04
கோவை; கோவை ரேஸ்கோர்ஸ் வெஸ்ட் கிளப் ரோட்டில் உள்ள ஸ்ரீ சத்ய சாய் மந்தீரில் சிறப்பு ஆராதனை மகோற்சவம் நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ சத்யசாய் ஸித்தி தினத்தை ஒட்டி காலை நிகழ்ச்சிகள் கணபதி ஹோமத்துடன் துவங்கி பஜனை பாடல்கள் பாடப்பட்டன. இதில் ஏராளமான பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலையில் வேதம் மற்றும் பஜன் நிகழ்ச்சியுடன் சிறப்பு சொற்பொழிவாளர் டாக்டர் கிருஷ்ணா கிஷோர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் மங்கள ஆராத்தி எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.