ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2025 05:04
துாத்துக்குடி; நவதிருப்பதிகளில் முதல் கோவிலான தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா விமரிசையாக நடந்தது.
துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக கருதப்படும் இக்கோவிலில், வெகு விமரிசையாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழா, கொடியேற்றத்துடன் 18 ம் தேதி துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும், காலையிலும் இரவிலும் சுவாமி கள்ளபிரான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் திருவீதி உலா நடக்கிறது. கருடசேவை ஏப். 22ம் தேதி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று 26ம் தேதி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.