பதிவு செய்த நாள்
05
மே
2025
12:05
கோவை; வடவள்ளி சீனியர் சிட்டிசன் வளாகத்திலுள்ள, புவனேஸ்வரி ஹாலில் ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சியும், ஸ்ரீ சுப்ரமணிய சப்தாஹம் நிகழ்ச்சியும், பக்தர்கள் சூழ விமரிசையாக நடந்தது.
முருகப்பெருமான் வழிபாட்டில், தொன்மை வாய்ந்தது வேல் வழிபாடு. பக்தியும், சக்தியும் நிறைந்த முருகப்பெருமானின் வேல்பூஜை, வேல் மாறல் பாராயணம், வைதீகமுறைப்படி திருப்புகழ் சப்தாகத்துடன், கடந்த ஒருவாரமாக நடந்தது. நேற்று, ஸ்ரீ வள்ளி திருக்கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சியோடு நிறைவடைந்தது. நேற்று காலை சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, கலசபூஜை, மஹான்யாச ஜபம், பிரார்த்தனை, ருத்ராபிஷேகம், தோடயமங்கலம் குரு மற்றும் சர்வதேவதா கீர்த்தனைகள் இசைக்கப்பட்டன. ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத, ஸ்ரீ சுப்ரமணியருக்கு பச்சைபுடி சுற்றி, மாலை மாற்றி, முத்துக்குத்து வைபவமும், கல்யாண அஷ்டபதியுடன் மாங்கல்யதாரணமும் நடந்தது. இடும்பன் பானக பூஜையுடன் நிறைவடைந்தது.சிறப்பு அன்னதானம் பரிமாறப்பட்டது. திரளானோர் பங்கேற்று, சுவாமியின் அருளை பெற்றனர்.