பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2025 04:05
பிரான்மலை; பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.
சங்க இலக்கியத்தில் பாடப்பெற்றதும் பாண்டிய நாட்டு 14 திருத்தலங்களில் ஐந்தாவது சிறப்புக்குறியதுமான இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 1 இல் துவங்கியது. ஐந்தாம் திருவிழாவான இன்று திருக்கல்யாணம் நடந்தது. காலை 9:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் மாலை மாற்றும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து குன்றக்குடி பொன்னம்பல அடிகள் திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்தார். உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மஞ்சள், குங்குமம் மாங்கல்ய கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாணத்துக்கு வந்திருந்த பக்தர்கள் மெய் எழுதிச் சென்றனர். திருவிழாவின் 9ஆம் நாளான மே 9ஆம் தேதி திருத்தேரோட்டம் நடக்கிறது.