பதிவு செய்த நாள்
11
மே
2025
11:05
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், இன்று (11ம் தேதி)குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை நடக்கிறது.
நவக்கிரகங்களில் ஒன்றான குரு பகவான் இன்று பகல் 1:19 மணிக்கு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், இன்று சிறப்பு பூஜை நடக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜையான தட்சணாமூர்த்தி பூஜை நேற்று காலை நடைபெற்றது. கோவில் வளாகத்தில் உள்ள 18 சித்தர்களுக்கு, உலக நன்மை வேண்டி சிறப்பு ேஹாமம் நடைபெற்றது. தொடர்ந்து தட்சணாமூர்த்தி ேஹாமம், மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. இன்று காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1,008 கொழுக்கட்டை நெய்வேத்தியம் மற்றும் 30 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடக்கிறது. தொடர்ந்து குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சணாமூர்த்தி ஹோமம், மகா பூர்ணாஹூதி, ராசி பரிகார ஹோமம், 108 லிட்டர் பால் அபிஷேகத்தை தொடர்ந்து, பகல் 1:09 மணிக்கு கலசாபிஷேகம் நடக்கிறது. பூஜைகள் அனைத்தும் சிதம்பர கீதாராம் குருக்கள் தலைமையில் நடக்கிறது. சிறப்பு பூஜையில் பங்கேற்க பாலாபிஷேகத்திற்கு ரூ.200, லட்சார்ச்சனைக்கு ரூ.300, குருசாந்தி ஹோமத்திற்கு ரூ.1000, பரிகார ஹோமத்திற்கு ரூ.5000 கோவில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.