பதிவு செய்த நாள்
11
மே
2025
02:05
தஞ்சாவூர்; தஞ்சாவூர் அருகே திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயச்சி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அருகே திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனி சன்னதியில் ராஜகுருவாக தெட்சிணாமூர்த்தி எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் குருபகவான் நேற்று மதியம் 1.19 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாரதனை ஆகியவை நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் விக்னேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்திருந்தனர் இதைத் தொடர்ந்து குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசி காரர்கள் பரிகாரம் செய்து கொண்டனர். குருபெயர்ச்சியின் தொடர்ச்சியாக மே 23ம் தேதி லட்சார்ச்சனையும், 24,25ம் தேதிகளில் சிறப்பு பரிகார ஹோமமும் கோவிலில் நடைபெறவுள்ளது.