ஞானகுரு தட்சிணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2025 04:05
திருவெண்ணெய்நல்லூர்; திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஞானகுரு தட்சிணாமூர்த்தி குரு பீடத்தில் குரு பெயர்ச்சி விழா நடந்தது.
குரு பகவான் நேற்று மதியம் சரியாக 1: 24 மணியளவில் ரிஷப ராசிலிருந்து மிதுன ராசிக்கு பிரவேசிக்கிறார். அதனையொட்டி திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பையூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற 12 அடி உயரம் உள்ள ஞான குரு தட்சிணாமூர்த்தி குருபீடத்தில் குரு பெயர்ச்சியையொட்டி இன்று காலை 9:30 மணியளவில் விநாயகர் பூஜை, கலச பூஜை, குரு பரிகார ஹோமம் தொடர்ந்து 11:00 மணியளவில் பாலாபிஷேகமும், 12:00 மணியளவில் பரிகார கலச மகா அபிஷேகம், தொடர்ந்து 1:24 மணிக்கு குருபகவானுக்கு மகா சிறப்பு தீபாரதனையும் நடந்தது. விழாவில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.